search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரோகிர் சர்மா"

    ஆஸ்திரேலியா தொடர் தொடங்கும் நிலையில் ஷிகர் தவான் பார்முக்கு திரும்பியது மிகவும் முக்கியமானது என்று ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். #INDvWI
    இந்திய அணியின் தொடக்க பேட்ஸ்மேன் ஆன ஷிகர் தவான் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சிறப்பாக விளையாடவில்லை. ஒருநாள் போட்டியில் மிகப்பெரிய அளவில் ரன் குவிக்க திணறினார். அதேபோல் டி20 போட்டியிலும் திணறி வந்தார். நேற்று சென்னையில் நடைபெற்ற போட்டியில் சிறப்பாக விளையாடி 62 பந்தில் 92 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.

    இந்தியா அடுத்து ஆஸ்திரேலியா சென்று மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இந்த போட்டிக்கு முன் தவான் மீண்டும் பார்முக்கு வந்தது முக்கியமானது என்று ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ரோகித் சர்மா கூறுகையில் ‘‘அணியின் கண்ணோட்டத்தில் முக்கியமான ஆஸ்திரேலியா தொடருக்கு முன் வீரர்கள் சிறப்பாக விளையாடி ரன்கள் குவிப்பது முக்கியமானது. ஒருநாள் போட்டியில் சிறப்பாக போட்டிங் செய்தாலும் பெரிய அளவில் ரன் குவிக்கவில்லை. முக்கியமான தொடருக்கு முன் அணியின் வெற்றிக்கு உதவும் வகையில் அதிக ரன்கள் குவித்ததால் நான் மகிழ்ச்சியடைகிறேன்.



    ரிஷப் பந்த் ஆடுகளம் இறங்கி ரன்கள் குவிக்க வேண்டும் என்ற வேட்கையில் உள்ளார். இது அவருக்கு சரியான தருணமாக இருந்தது. முதல் ஆறு ஓவர்களுக்குள் இரண்டு விக்கெட்டுக்களை இழந்திருந்தோம். இதனால் சற்று நெருக்கடி ஏற்பட்டது. நெருக்கடியை தவான் மற்றும் ரிஷப் பந்த் சிறப்பாக எதிர்கொண்டார்கள்.

    எப்போதுமே இந்தியா வெளிநாடு சென்று விளையாடும்போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவது சவாலானதாகும். ஒவ்வொரு முறையில் அங்கு செல்லும்போது அணி, வீரர்கள் மற்றும் தனிப்பட்ட முறையில் பரிசோதனையாகும். ஆஸ்திரேலியா மாறுபட்ட பந்தை கொண்ட விளையாட்டு’’ என்றார்.
    டி20 கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் ரோகித் சர்மா புதிய சாதனைப் படைக்க வாய்ப்புள்ளது. #INDvWI #RohitSharma
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இந்திய அணி ஏற்கனவே டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 3-1 என்ற கணக்கிலும் கைப்பற்றி இருந்தது.

    இதேபோல் 20 ஓவர் தொடரையும் இந்திய அணி கைப்பற்றுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதால் ரோகித் சர்மா அணியை வழி நடத்துகிறார். டோனி நீக்கப்பட்டதால் அவர் இடத்தில் ரிசப்பண்ட் விளையாடுவார்.

    3 போட்டிக்கொண்ட இந்த 20 ஓவர் தொடரில் ரோகித் சர்மா புதிய சாதனை படைப்பாரா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    20 ஓவர் சர்வதேச போட்டியில் அதிக ரன் எடுத்துள்ளவர் மார்டின் கப்தில். நியூசிலாந்தை சேர்ந்த அவர் 73 இன்னிங்சில் 2271 ரன் எடுத்துள்ளார். சராசரி 34.40 ஆகும். இரண்டு சதமும், 14 அரை சதமும் அடித்துள்ளார். அதிகபட்சமாக 105 ரன் எடுத்துள்ளார்.

    ரோகித் சர்மா 77 இன்னிங்சில் 2086 ரன் எடுத்து 5-வது இடத்தில் உள்ளார். சராசரி 32.59 ஆகும். 3 சதமும், 15 அரை சதமும் எடுத்துள்ளார். அதிகபட்சமாக 118 ரன் குவித்துள்ளார்.



    கப்திலின் சாதனையை முறியடித்து புதிய சாதனை நிகழ்த்த ரோகித் சர்மாவுக்கு 186 ரன்களே தேவை. தொடக்க வீரரான அவர் தற்போது நல்ல நிலையில் இருக்கிறார். வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரில் ரோகித் சர்மா 389 ரன்கள் குவித்து 2-வது இடத்தை பிடித்தார்.

    மேலும் வீராட் கோலி 20 ஓவர் தொடரில் ஆடாததால் அவருக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. கோலி 20 ஓவர் ஆட்டத்தில் 2102 ரன் எடுத்து 4-வது இடத்தில் உள்ளார். அவரை முந்த ரோகித் சர்மாவுக்கு 17 ரன்களே தேவை. இன்றைய ஆட்டத்திலேயே அவர் கோலியை முந்தி அதிக ரன் எடுத்த இந்திய வீரர் என்ற சாதனையை படைப்பார். கப்திலையும் முந்தி அதிக ரன் எடுத்த வீரர் என்ற சாதனையையும் படைக்க ரோகித்சர்மாவுக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
    ×